Pages

Ads 468x60px

Wednesday, September 26, 2012

குமாரசாமி சித்தர் சுவாமிகள் - ஜீவசமாதி

குமாரசாமி சித்தர் சுவாமிகள் 

குமாரசாமி சித்தர் சுவாமிகள் அவர்கள் 108 சித்தர்களில் ஒருவர் ஆவார். சித்தரது ஜீவசமாதி கோவை மாவட்டம், பல்லடம் வட்டம், சுல்தான் பேட்டை, பூராண்டம் பாளையத்தில் அமைந்துள்ளது.






நான்கு விதமான மரங்கள் இணைந்து வளர்ந்துள்ள முத்துகுமாரசாமி சித்தரின் ஜீவசமாதி 
ஜீவசமாதியின் பின்னே உள்ள நாகலிங்க மரம் 
நாகலிங்க பூ

கோவிலுக்கு செல்லும் வழி 

திருப்பூர் to பொள்ளாச்சி  செல்லும் வழியில் உள்ள செஞ்சேரிப்பிரிவில் இருந்து (சிந்து நகர்) மேற்கே 2 km தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பேருந்து வழிதடம் 


கோவை - வி .வேலூர் கணபதி - பேருந்து 
பல்லடம் -  செஞ்சேரிப்பிரிவு -  பேருந்து 
கிணத்துகடவு - திருப்பூர் - அரசு  பேருந்து  







Monday, September 24, 2012

Monday, September 17, 2012

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது. 
  
 

அழுக்குச்சித்தர்  என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை  உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள்  அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார்.  இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி  அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும்  கோவில்கள்  ஆகும். 
அடுத்து வரப்போகும் பதிவுகளில்  அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஜீவசமாதி பற்றிய படங்களும்,விவரங்களும் வெளியிடப்படும்.

ஷீரடி சாய்பாபாவின்  பக்தரின் அனுபவம்



முகப்பு தோற்றம் 

உள்ளே செல்லும் வழி 


அழுக்கு சுவாமிகளின் சீடரான அப்பாபைத்தியம்  சுவாமி
இக்கோவிலில் உள்ள  அப்பாபைத்தியம்  சுவாமி
மேலும் அப்பாபைத்தியம்  சுவாமி பற்றி தெரிந்து  கொள்ள 

செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் 












Thursday, September 13, 2012

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி 

 ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையம் என்னும் ஊரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.


இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,பெரும்பாலான நேரங்களில் வடதிசை நோக்கி இடது காலை பூமியில் ஊன்றி வலது காலை இடது தொடை மீது வைத்து தவம் செய்துகொண்டு  இருப்பார்.இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.இவரை ரயில்வே காவல் துறையில் இருந்த சீரடி சாய்பாபாவின் பக்தரான வரதராஜு அவர்கள் அடையாளம் கண்டு இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.( ஆண்டு 1940-41 ). இறுதியாக  புரவிபாளையம் வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.




























மேலும் விவரங்கள் அறிய கோடிசாமியின் சீடரான வங்வங் கோடிதாசன் அவர்கள் எழுதிய " ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் வருகையும் மகிமையும்" புத்தகத்தை படிக்கவும்.


செல்லும் வழி... 




























ஜமீன் செல்லும் வழி... 
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 30 வது கிலோமீட்டரில் வலதுபுறம் செல்லும் சாலையில் (வடக்கிபாளையம் பிரிவு) சுமார் 18 வது கிலோமீட்டர் சென்றவுடன் புரவிபாளையம் என்ற சிற்றூரில்  ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. மாதத்தில் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Tuesday, September 11, 2012

மூன்றாம் கண்

ஆன்மீக உண்மைகள் -  பகுதி 4


பகுதி-1 பார்க்க

பகுதி-2 பார்க்க

பகுதி-3 பார்க்க


நம் உடலில் பிரபஞ்சசக்தியின் நிறைவால் விழிக்கும் மூன்றாம் கண் 

அடுத்த பதிவு 

சூட்சும உடலும், சூட்சும பயணமும் 

Wednesday, September 5, 2012

பிரமிடில் - பிரபஞ்ச சக்தி

ஆன்மீக உண்மைகள் -  பகுதி 3



பிரமிடில் கிடைக்கும் மூன்று மடங்கு அதிகப்படியான பிரபஞ்ச சக்தி


அடுத்த பதிவு 

நம் உடலில் பிரபஞ்சசக்தியின் நிறைவால் விழிக்கும் மூன்றாம் கண் 


Monday, September 3, 2012

வெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி


ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம்

வெள்ளை ஆடை சித்தர் அவர்களின் ஜீவசமாதி கேரளாவில் பாலக்காடு மெயின் ரோடில் கொழிஞ்சம்பார அருகில் அப்புபிள்ளையூர் என்ற இடத்தில் ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்னும் பெயரில் அமைந்துள்ளது.



சுவாமிகள் பற்றி 

 அகத்தியர் வாக்கு 

 ஜீவசமாதியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 




கோவிலின் தோற்றம் 











சுற்றிலும் 
பசுமையான மரங்களும், செடிகளும் கண்களுக்கு விருந்தாக,
தூய்மையான காற்றே சுவாசத்தின் வாசமாக, 
பறவைகள் எழுப்பும் ஓசையே கேட்பதற்கு இசையாக, 
மெல்லிய மழை சாரலே ஸ்பரிசத்தின் பரிசாக, 
அமைந்துள்ள சூழலில் "வெள்ளை ஆடை சித்தர்" அவர்களின் ஜீவசமாதியில் அமர்ந்து இருப்பதே உங்களின் உள்நிலையில் பல மாற்றங்களை உருவாக்கும்.

பாலக்காடு மெயின் ரோடில் அப்புபிள்ளையூருக்கு  சில அடிகள் முன்னே சாலையின் வலது புறத்தில் இருக்கும் போர்டின் அருகே வலதுபுறம் செல்ல வேண்டும் 

செல்லும் வழி 

செல்லும் வழி 

செல்லும் வழி 






செல்லும் வழி 



ஜீவசமாதியின் அருகில் 























இப்பொழுது திருகோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. சுவாமிகளின் சீடர்களான திரு முரளிதரன் மற்றும் அவர் நண்பர்களுடன், தங்களது உடல் உழைப்பையும், சிலர் தங்கள் சேமிப்பை கொடுத்தும், சிலர் வெளியில் கடனுதவி பெற்றும் இத்திருபணியில் ஈடுபட்டுள்ளனர். 
இக்காலத்தில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் இருந்தாலும் இந்த இளைஞர்கள் தங்களது நேரத்தையும், உழைப்பையும், பொருளையும் இத்திருப்பணிக்காக அர்பணித்துள்ளனர். இவர்களின் செயல் போற்றுதலுக்குரியது. 
இவர்கள் அனைவரும் சித்தர்களின், ஞானிகளின் அருளும் ஆசியும் பெற்று  தங்களின் குருவான வெள்ளை ஆடை சித்தரின் அருளாசியும் பெற்று இவர்களின் பணி மேலும் சிறக்க பிராத்திக்கிறேன். 
இக்கோயில் கட்டிட திருப்பணியில் பெரும்பகுதி சித்தரின் சீடர்களின் உழைப்பால்    ( கூலிக்கு ஆட்களை வைக்காமல் ) உருவாகிக்கொண்டுள்ளது

இதை படிப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியை இத்திருப்பணிக்கு வழங்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.








  தொடர்புக்கு





Updated links