Pages

Ads 468x60px

Thursday, December 13, 2012

சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி

சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி

சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை சோமநாத அவதானியார் மற்றும் தாயார் பெயர் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.
ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)
கோவிலின் உள்ளே 
ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல்,மனம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டார் பார்த்த  அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால்,  தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டார் .ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தார் .அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான்.
ஈஷாவில் உள்ள சதாசிவ பிரமேந்திரர் கல்வெட்டு 

கோவிலில் உள்ளே உள்ள தகவல் பலகைகள் 
கோவிலை சுற்றி 
கோவிலின் உள்ளே 
கோவிலை சுற்றி 
பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

இந்த கோயிலின் சிறப்புகள் குறித்து கோயில் அர்ச்சகர் நாராயண உபாத்தியாய கூறுகையில்
இந்த ஆலயம் மிக சக்தி வாய்ந்தது.இவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் 10வது நாளில் அந்த இடத்தில் வில்வமரம் வளரும், அதன் அருகிலேயே சுயம்பு லிங்கம் தோன்றும் என்று கூறினார்.
அதே போன்று நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு லிங்கமும் காட்சி தருகிறது.

கோவிலின் அருகில் உள்ள காவிரி ஆறு 






Monday, December 10, 2012

கொங்கனசித்தர் தவ நிலை குகை

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் 

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து  காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.கோவிலின் அருகில் மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. செல்லும் வழியில் கொங்கணச்சித்தரின் சீடரான ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த குகை

தலபெருமை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.


ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி



ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி

கொங்கனசித்தர் தவ நிலை குகை

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.






பார்க்கும் இடம் எங்கிலும் வில்வமரம் 




உள்ளே செல்லும் வழி - 1

உள்ளே செல்லும் வழி - 2






One More Link about this Spot

Some clicks in the hills