Pages

Ads 468x60px

Friday, December 26, 2014

வருஷ பூர்த்தி பெருவிழா

ஸ்ரீலஸ்ரீ வெள்ளாடை சித்தர் திருக்கோவில் வருஷ பூர்த்தி பெருவிழா 31.01.2015





வெள்ளாடை சித்தர் பற்றியும் ஜீவசமாதி பற்றியும்  அறிய கீழே உள்ள லிங்கில்  பார்க்கவும் 

வெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி (click here)

கும்பாபிஷேகத்தில் கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்  - கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம் 

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் கருடலோக சித்தர்கள் - புகைப்படங்கள் (click here)


ஆத்மநாதவனம்


ஆத்மநாதவனம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 20 k m  தொலைவில் இயற்கை அன்னையின் அரவணைப்பில், பசுமையான சூழலில்  அமைந்துள்ளது.
செல்லும் வழி (Map)









மேலும் விபரங்களுக்கு
http://www.yaagavaguru.org/
http://www.livingextra.com/2014/02/fortunately-luckily.html
தொடர்பு கொள்ள - 8056798888


Wednesday, January 29, 2014

ஸ்ரீலஸ்ரீ வெள்ளாடை சித்தர் - வருஷோற்சவ விழா அழைப்பிதழ்

வருஷோற்சவ விழா 

ஸ்ரீலஸ்ரீ வெள்ளாடை சித்தர் ( திருச்சிற்றம்பல சுவாமிகள் ) திருக்கோவில் வருஷோற்சவ விழா அழைப்பிதழ். 


நாள் தை மாதம் 28ம் நாள் (10-02-2014) திங்கட்கிழமை 


வெள்ளாடை சித்தர் பற்றியும் ஜீவசமாதி பற்றியும்  அறிய கீழே உள்ள லிங்கில்  பார்க்கவும் 

வெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி (click here)

கும்பாபிஷேகத்தில் கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்  - கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம் 

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் கருடலோக சித்தர்கள் - புகைப்படங்கள் (click here)

Jeeva Samadhi Video of Velladai Siddhar


Video of the Temple 



மேலும் தகவல்கள் அறிய

Monday, January 27, 2014

மரணத்திற்கு பின் நடப்பது என்ன?

படித்ததை உங்களுடன் - 8

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்

நன்றி மாலைமலர் 

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்?  இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார். 

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை. 

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:- 

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார். 

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம். 

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை. 

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார். 

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார். 

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். 

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார். 

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

நன்றி மாலைமலர்

Friday, January 17, 2014

Guru Pooja Invitations

Srimath Satchidananda swamigal

Srimath Satchidananda swamigal Guru Pooja 

17-1-2014.

for more Visit One of the most powerful jeeva samadhi

Srimath Satchidananda swamigal 

Srimath Sadhananda Swamigal 92th Guru Pooja 

19-01-2014