அப்புபிள்ளையூர், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு மாவட்டம் (கேரளா)
PH - 09994974557(TN), 09605171877(KL).
ஸ்ரீலஸ்ரீ வெள்ளாடைசித்தர் திருக்கோவில் வருஷ பூர்த்தி பெருவிழா இனிதே நிறைவடைந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் ருத்ர ஹோமமும் மூலவருக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை 11 மணி அளவில் சிவபஞ்சாட்சரம் மந்திரம் பக்தர்களால் ருத்ராட்சம் கொண்டு ஜெபிக்கப்பட்டு இறைவனுக்கு சமர்பிக்கப்பட்டது. அதிசயக்க தக்க வகையில் சுமார் 1500 பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.( இந்த பூஜைக்கு முன்பு வரை சுமார் 200 பக்தர்கள் மட்டுமே இருந்தனர் )
மாலை அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்ட உலக நன்மைக்காக 10008 தீபங்கள் ஏற்றப்பட்டது.
கோவில் திருப்பணியில் .......
இத்திருப்பணியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் உழைப்பாகவும், பொருளாதார ரீதியிலும் தங்களால் இயன்றளவு உதவி செய்தனர்.
இச்சிறுமிகள் மூன்று தினங்களாக இக்கோவிலின் திருப்பணிக்காக உழைத்துள்ளனர். (10008 விளக்குகளையும் சுத்தப்படுத்தி மஞ்சள் இட்டுள்ளனர்) |
உலக நன்மைக்காக 10008 தீபங்கள் ஏற்றப்பட்டது. |
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது |
இத்திருவிழா சிறப்பாக நடைபெற காரணமான அனைவருக்கும் சித்தர்களின், ஞானிகளின் அருளும் ஆசியும் பெற்று தங்களின் குருவான வெள்ளை ஆடை சித்தரின் அருளாசியும் பெற்று இவர்களின் பணி மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.
வெள்ளாடை சித்தர் பற்றியும் ஜீவசமாதி பற்றியும் அறிய கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்
வெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி (click here)