Saturday, September 1, 2012
ஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி
ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள்
ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 km தொலைவில் இடும்பன் மலை கோயில் செல்லும் வழியில் "இரசமணி சித்தர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் சுவாமிகள் சித்தவைத்திய ஜீவசமாதி ஆசிரமம் " என்ற பெயரில் அமைந்துள்ளது.
![]() |
ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள் |
![]() |
ஒடுக்கம் அடைந்த இடம் |
முகவரி,
77, திண்டுக்கல் ரோடு, ( பழனி ஆண்டவர் கலை கல்லூரி பின்புறம் )
பழனி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
மேலும் தகவல் அறிய
Wednesday, August 29, 2012
பிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி
ஆன்மீக உண்மைகள் - பகுதி 1
தொடரும்.....
( அடுத்த பதிவு பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவது எப்படி? )
ஆன்மீக உண்மைகள்
ஆன்மீக உண்மைகள் - தொடர்
தியான அனுபவங்களை பற்றிய திரைப்படம்.
இந்தத் திரைப்படம் ஆன்மீக பரிசோதனைகளின் மூலமாகக் கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் சாரம்.
தியானம் செய்வதற்கு இந்த திரைப்படம் உறுதுணையாக இருக்கும்.
இந்த தொடரின் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை பற்றிய திரைப்பட தொகுப்பை (Video Clips ) பின்வரப்போகும் பதிவுகளில் காணலாம்.
இந்தத் திரைப்படம் ஆன்மீக பரிசோதனைகளின் மூலமாகக் கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் சாரம்.
தியானம் செய்வதற்கு இந்த திரைப்படம் உறுதுணையாக இருக்கும்.
இந்த தொடரின் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளை பற்றிய திரைப்பட தொகுப்பை (Video Clips ) பின்வரப்போகும் பதிவுகளில் காணலாம்.
சித்தர்கள் பற்றி அறிய
சித்தர்கள்
சித்தர்கள் பற்றி அறிய ஆர்வம்
உள்ளவர்களுக்கு உதவும் தளங்கள்
தமிழ் மொழியில்
in English
Monday, August 27, 2012
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
ஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் "மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்" தபோவனம் உள்ளது.
ஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் தமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, ஞானகுருவின் மனைவி பரிபூரண குணமடைந்தார்கள்.
குருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக "உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் "மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்
ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள் பற்றி அறிய http://omeswara.blogspot.in/2011/12/blog-post_3350.html
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பற்றி அறிய
![]() |
| ஞானகுரு அவர்களின் உடல் ஒடுக்கமான இடம் |
![]() |
| ஞானகுரு அவர்களின் உடல் ஒடுக்கமான இடம் |
![]() |
| தியானம் |
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் தொடர்பாகவும், அவர் எழுதிய புத்தகங்களை இலவசமாக படிக்கவும் இங்கே click செய்யவும்.
Address:
Vadukapalayam,
Punjai Puliyampatty -638459.
Phone - 04295267318
Cell - 9791277740
Location : https://maps.google.co.in/ Thabovanam
Subscribe to:
Posts (Atom)















