Pages

Ads 468x60px

Monday, April 29, 2013

நடமாடும் சித்தர் பழனி சாமிகள்

 மூட்டை சித்தர்



    பழனியில் இருந்து  திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர்  மூட்டை சாமிகளது  குடில் அமைந்துள்ளது. ( Map )







அவர் நிகழ்த்திய அதிசயங்கள் பலவற்றை செவிவழியாக நான் கேட்டிருக்கிறேன், இருந்தாலும் அந்த அதிசயங்களில் சம்பத்தபட்டவர்களின் நேரடியான கருத்துக்களை வெளியிட காத்துக்கொண்டிருக்கிறேன்.


என்னுடைய அனுபவத்தில்

1.   அவர் அதிகமாக பேசுவதில்லை. இவ்விடத்தில் பணத்திற்கு மதிப்பில்லை.

2.   வந்திருப்பவர்களில் ஒரு சிலரை அவரே அழைத்து  பேசுகிறார்.

3.   அவர் பேசும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அதன் பின்
      உள்ள ஆழமான உண்மைகளும் அதற்கான காரணமும் புரிந்துகொள்வது கடினமே.

3.   சிலருக்கு பளுதூக்கும் ( பாறைகளை இடம் மாற்றி வைத்தல் ) வேலைகளை
      கொடுக்கிறார்.

4.   ஒரு சிலரிடம் ( வசதிபடைத்தவர்கள் ) , குடிலுக்கு வந்திருப்பவர்களுக்காக உணவு
      வாங்கி வர செய்து அவர்கள் கையாலே பரிமாற செய்கிறார்.
     (பரிமாறுபவர்களை பார்க்கும் பொழுது இதற்கு முன் இத்தகைய வேலைகளை 
      செய்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது )

tamil.webdunia வில் இருந்து 

பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். சிலரெல்லாம் அவரைப் பார்க்கப் போனால், போடா இங்கே எதுக்குடா வந்த, என்று துரத்திவிடுவார். சிலரைப் பார்த்து, அந்தக் கல்லையெல்லாம் பொறுக்கி இந்தப் பக்கம் போடு என்பார். 

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேர் போயிருக்கிறார்கள். அதில் ஒருவரைப் பார்த்து, போடா, இங்கே வராதடா, பொம்பளை பின்னாடி சுத்தறவனே என்று சொல்லியிருக்கிறார். அவருடன் சென்றவர் நம்முடைய நண்பர். சாமி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் அது மாதிரியான ஆள்தான் என்று சொன்னார். 

இதேபோல வேறொருவர் போன போது, தெற்கே போய் வடக்கே போடா என்று சொல்லியிருக்கிறார். இவர், தெற்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். வடக்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். இரண்டு வீட்டில் எதை வாங்குவது என்று ஒரு மாதமாக குழப்பத்தில் இருந்திருக்கிறார். சித்தர் அவ்வாறு சொன்னதால், முதலில் தெற்கில் இருந்த வீட்டை வாங்கிவிட்டார். இதையெல்லாம் சித்தர்களுடைய சங்கேத பாஷை என்று சொல்வார்கள். 

பொதுவாக சித்தப் புருஷர்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் இப்பொழுது கூட ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்குகிறார். திடீரென்று நான்கு நாட்களுக்கு சாப்பிடமாட்டார். எங்கேயாவது சென்றுவிடுவார். எங்கேயாவது சென்று உட்கார்ந்துகொண்டு இருப்பார். எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. 

பழனி பக்கம் போனால், இதுபோன்று சாது சித்தர், சாக்கடை சித்தர், மூட்டை சித்தர் எ‌ன்று பல‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். குட்டை சாமி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் முக்தி அடைந்துவிட்டார். இவரெல்லாம் ஒரு நேரத்தில் மூன்று இடத்திலெல்லாம் இருந்திருக்கிறார். பெசன்ட் நகரில் இருக்கும் நண்பர் ஒருவருட‌ன் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பழனியில் இருக்கிறோம், எங்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சித்தர் வந்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நண்பர் சொன்னார். என்ன சொல்ற நீ, நாங்கள் பழனிக்கு வந்திருக்கிறோம். சித்தர் எங்களுடன்தான் இருக்கிறார் என்று சொன்னோம். இல்லை, இங்கே வந்திருக்கிறார், பேசு என்று ஃபோனை கொடுத்தார். அவர் பேசினார். இதுபோன்றெல்லாம் நடந்திருக்கிறது. நான் குறிப்பிட்ட மூட்டை சித்தரையெல்லாம் பார்த்தால், பைத்தியக்காரனைப் போலத்தான் இருப்பார். ஆனால், நிறைய சக்திகள் உடையவர்கள்.

பழனி சித்தர் முட்டை சாமிகளை பார்க்க காத்திருப்பவர்களில் ஒரு பகுதி  





அவரது பக்தர்கள் தரும் செய்திகள் இந்த பதிவில் இணைக்கப்படும். பக்தர்கள் தங்களது அனுபவங்களை e-mail ID யுடன் பதிவின் கீழே comment செய்யவும்.

மேலும் அறிய 

Thursday, April 4, 2013

ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் குருபூஜை புகைபடங்கள்


ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதியான 28 ஆம் ஆண்டுவிழா அன்று எடுத்த புகைபடங்கள்... (22-02-2013)








Wednesday, April 3, 2013

பயணித்ததை உங்களுடன்-புத்தசபா

புத்தசபா - சாரநாத்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாரநாத் அல்லது சாரநாதா என்று அழைக்கப்படும் ஊரில்தான் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் தம்மம் என்பதைப் போதித்தார். அவர் போதனை செய்த இடத்தில் அவருடைய சிலையையும் அவரது சீடர்களது சிலையையும் அமைத்துள்ளனர்.



 



Monday, March 18, 2013

பயணித்ததை உங்களுடன் - மணிகர்ணிகா

மணிகர்ணிகா படித்துறை

மணிகர்ணிகா கட்டம் முக்கிய படித்துறை. ஆதிசங்கரர்  எழுதிய மணிகர்னிகாஷ்டகத்தில் மணிகர்ணிகா கட்டம் பற்றி மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு உயிரினமும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.



இப்படித்துறையில் ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். "" மணிகர்ணிகா கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. வெண்ணிற ஜடாமுடியுடன் அங்கு வந்த சிவபெருமான் தாரகமந்திரத்தை இறந்தவர்களின் காதில் ஓதினார். மறுபுறம் கருணையுடன் ஜகன்மாதாவும் உயிர்களைப் பிணித்திருக்கும் தளைகளை நீக்கி அருளினாள். பாக்கியம் பெற்ற அவ்வுயிர்கள் மோட்சகதியை அடைந்தன,'' என்று தன் அனுபவத்தைக் கூறினார்.

உடல்களை எரிப்பதனால் ஏற்பட்ட புகையால், புகைபடிந்துள்ள கட்டிடம் 


கோவிலின் முன் உள்ள இந்த இடத்தில் இருக்கும்  அக்னியை கொண்டே இங்கு எடுத்துவரப்படும் அனைத்து உடல்களும் தீ மூட்ட படுகின்றது.


இங்கு தீ விழுங்கிக்கொண்டிருக்கும் உடலின் நிலமைதான் இந்த உடலுக்குமா ?
ஆனால் இந்த உடலுக்காகத்தானே வாழ்க்கையின் அதிக காலத்தை செலவழிகிறோம்,இந்த உடலை நான் என்று நினைத்ததால் தானே போட்டி , பொறாமை ,பேராசை ,கோபம் ,காமம் போன்ற குணங்கள் தோன்றியது.இந்த குணங்களால் தானே வாழ்க்கையில் அனைத்து நிம்மதியும் இழந்து தவிக்கிறோம் என்ற எண்ணத்தில் பார்த்துக்கொண்டு உள்ளாரோ ?

இந்த உடலுக்குள் என்ன இருந்தது அன்று என்ன இல்லை இன்று.
நாம் நம் வாழ்க்கையில் அன்று இருந்த அந்த ஒன்றிற்கு முக்கியத்துவம் 
கொடுக்கின்றோமா ?
அல்லது சாம்பலாகும் இந்த உடலிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா ?

சிவவாக்கியர் பாடல் 
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.




திருமூலரால் எழுதப்பட்ட பாடலின் ஒரு சிறு பகுதி 
திருமந்திரம்

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

உடம்பினை  வளர்தேன்  உயிர் வளர்த்தேனே !!!!!


கடுவெளி சித்தர் பாட்டு 

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

விளக்கம் : மனித உயிர் ( ஜீவன் ) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது.இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (4+6=10) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்).

அதுபோல் அல்லாமல்  நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும் வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.