Pages

Ads 468x60px

Friday, November 30, 2012

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில்

தேவனாம்பாளையம்

அமணீஸ்வரர் திருக்கோயில் தேவனாம்பாளையம் என்ற ஊரில் கோவையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இக்கோவில் சுமார் 1500-2000 வருடங்கள் பழமையான கோவில் ஆகும்.

தல வரலாறு

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.

அர்த்தமண்டபத்தில் எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி ருத்ரதாண்டவர்




தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. 

இக்கோயில் கற்பக ஆற்றுக்கு நடுவே ஓர் பாறையின் மீது அமைந்துள்ளது. ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும் என்பதால் அச்சமயங்களில் இறைவனை வணங்கச்செல்வது சற்று சிரமம். இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.














கோவில் சுவரில் உள்ள கல்வெட்டுகள்















நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.

பொள்ளாச்சியில் இருந்து ( 18 கிமீ)நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பஸ்கள். கிணத்துக்கடவிலிருந்து (15 கி.மீ.)நெகமம் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.வாடகை கார்களில் செல்வது நல்லது. 



Friday, October 12, 2012

Wednesday, September 26, 2012

குமாரசாமி சித்தர் சுவாமிகள் - ஜீவசமாதி

குமாரசாமி சித்தர் சுவாமிகள் 

குமாரசாமி சித்தர் சுவாமிகள் அவர்கள் 108 சித்தர்களில் ஒருவர் ஆவார். சித்தரது ஜீவசமாதி கோவை மாவட்டம், பல்லடம் வட்டம், சுல்தான் பேட்டை, பூராண்டம் பாளையத்தில் அமைந்துள்ளது.






நான்கு விதமான மரங்கள் இணைந்து வளர்ந்துள்ள முத்துகுமாரசாமி சித்தரின் ஜீவசமாதி 
ஜீவசமாதியின் பின்னே உள்ள நாகலிங்க மரம் 
நாகலிங்க பூ

கோவிலுக்கு செல்லும் வழி 

திருப்பூர் to பொள்ளாச்சி  செல்லும் வழியில் உள்ள செஞ்சேரிப்பிரிவில் இருந்து (சிந்து நகர்) மேற்கே 2 km தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பேருந்து வழிதடம் 


கோவை - வி .வேலூர் கணபதி - பேருந்து 
பல்லடம் -  செஞ்சேரிப்பிரிவு -  பேருந்து 
கிணத்துகடவு - திருப்பூர் - அரசு  பேருந்து  







Monday, September 24, 2012

Monday, September 17, 2012

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது. 
  
 

அழுக்குச்சித்தர்  என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை  உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள்  அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார்.  இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி  அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும்  கோவில்கள்  ஆகும். 
அடுத்து வரப்போகும் பதிவுகளில்  அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஜீவசமாதி பற்றிய படங்களும்,விவரங்களும் வெளியிடப்படும்.

ஷீரடி சாய்பாபாவின்  பக்தரின் அனுபவம்



முகப்பு தோற்றம் 

உள்ளே செல்லும் வழி 


அழுக்கு சுவாமிகளின் சீடரான அப்பாபைத்தியம்  சுவாமி
இக்கோவிலில் உள்ள  அப்பாபைத்தியம்  சுவாமி
மேலும் அப்பாபைத்தியம்  சுவாமி பற்றி தெரிந்து  கொள்ள 

செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் 












Thursday, September 13, 2012

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி 

 ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையம் என்னும் ஊரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.


இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,பெரும்பாலான நேரங்களில் வடதிசை நோக்கி இடது காலை பூமியில் ஊன்றி வலது காலை இடது தொடை மீது வைத்து தவம் செய்துகொண்டு  இருப்பார்.இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.இவரை ரயில்வே காவல் துறையில் இருந்த சீரடி சாய்பாபாவின் பக்தரான வரதராஜு அவர்கள் அடையாளம் கண்டு இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.( ஆண்டு 1940-41 ). இறுதியாக  புரவிபாளையம் வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.




























மேலும் விவரங்கள் அறிய கோடிசாமியின் சீடரான வங்வங் கோடிதாசன் அவர்கள் எழுதிய " ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் வருகையும் மகிமையும்" புத்தகத்தை படிக்கவும்.


செல்லும் வழி... 




























ஜமீன் செல்லும் வழி... 
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 30 வது கிலோமீட்டரில் வலதுபுறம் செல்லும் சாலையில் (வடக்கிபாளையம் பிரிவு) சுமார் 18 வது கிலோமீட்டர் சென்றவுடன் புரவிபாளையம் என்ற சிற்றூரில்  ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. மாதத்தில் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.