கங்கா ஆரத்தி
“தர்ஸனாத் அப்ரஸதசி, ஜனனாத் கமலாலயே, காச்யாந்கி மரணான்
முக்தி, ஸ்மரணாத் அருணாசலே ”
“கயிலையைக் கண்டால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் மரணமடைந்தால் முக்தி, அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள்.
ஆத்திகரோ, நாத்திகரோ காசி நகரம், ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம்.
கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.(கட்டம் என்றால் படித்துறை ) இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடுவது மிகவும் புனிதமானதாகும்.
கங்காஆரத்தி தசாஸ்வமேத கட்டபடித்துறையில் மலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். கங்கா ஆரத்தி ஏழு விதமாக நடத்தப்படுகிறது. புஷ்பம், ஊதுவ்ற்றி, சாம்பிராணி, தீபம், கற்பூரம், தீப தூபம், வெண்சாமரம் கொண்டு
கங்காஆரத்தி தசாஸ்வமேத கட்டபடித்துறையில் மலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். கங்கா ஆரத்தி ஏழு விதமாக நடத்தப்படுகிறது. புஷ்பம், ஊதுவ்ற்றி, சாம்பிராணி, தீபம், கற்பூரம், தீப தூபம், வெண்சாமரம் கொண்டு
கங்கா மாதாவிற்க்கு ஆரத்தி பூஜை நடைபெறுகிறது.
படிகளிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையின் தங்கமாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம் உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா அருகில் பூஜை சாதனங்கள். பக்கவாட்டில் பக்கத்துக்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள். அதிலும் பூஜை பொருட்கள். இரவு ஏழு மணி நெருங்குகிறது. படிகளில் கூட்டம் வழிகிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் தகதகவெனப் பளபளக்கும் ஆரஞ்சு நிறப் பட்டாடையில் பூஜை மேடை அருகே கம்பீரமாக நிற்கும் இளைஞர்கள். டாணென்று ஏழுமணிக்கு அறிவிப்பைத் தொடர்ந்து நடுமேடையில் வந்தமரும் தலைமைப் பூசாரி பூஜையைத் தொடங்குகிறார். தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

இசைக் குழுவில் ஆரத்திப் பாடல் ஒலிக்கிறது. ஒவ்வொன்றாக ஏழுவிதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைக்களுக்கும் காண்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் ஐந்து பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிறில்லாமல் தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல நேர்த்தியாக செய்யும் அந்தக் காட்சி நம்மைப் பிரமிக்கவைக்கிறது. கனமான அந்த கொதித்துக் கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச் சுழற்றிக் கொண்டே மறுகையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு நான்கு பேரும் ஒரே நேரத்தில் வினாடி பிசகாமல் திரும்புகிறார்கள்.
இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆரத்தி. உச்சஸ்தாயியில் இசைக்குழுவின் குரல். பக்திப் பரவசத்தில் மக்களின், ‘கங்காமாதாகீ ஜே’ என்று ஓங்கி ஒலிக்கும் குரல்களின் பின்னணியில் மூன்று முறை சுழற்றப்படும் அந்தப் பெரிய தீபம் மக்களை நோக்கிக் காட்டப்பட்டு, பிறகு அணைக்கப்படுகிறது.

thanks to Mr.Ramanan, www.tamilhindu.com
Text contents taken from above website.
Nice One. Thanks for Sharing.
ReplyDeleteyou are most welcome. thanks for the comments....
DeleteThanks a lot for sharing the information...
ReplyDeletewelcome... thanks for the comments...
Deletephoto n video miga arumai..
ReplyDeletethanks for sharing......
nandri anna...
DeleteNice siva kasi yathirai anupavangalai pakirnthamaikku nanri
ReplyDeleteThank you very much Rudran ji (alias Joseph)... you shared information's and contacts about this places with us. it was really helped more for us.
Delete