ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம்
வெள்ளை ஆடை சித்தர் அவர்களின் ஜீவசமாதி கேரளாவில் பாலக்காடு மெயின் ரோடில் கொழிஞ்சம்பார அருகில் அப்புபிள்ளையூர் என்ற இடத்தில் ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்னும் பெயரில் அமைந்துள்ளது.
சுவாமிகள் பற்றி
அகத்தியர் வாக்கு
ஜீவசமாதியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
கோவிலின் தோற்றம்
சுற்றிலும்
பசுமையான மரங்களும், செடிகளும் கண்களுக்கு விருந்தாக,
தூய்மையான காற்றே சுவாசத்தின் வாசமாக,
பறவைகள் எழுப்பும் ஓசையே கேட்பதற்கு இசையாக,
மெல்லிய மழை சாரலே ஸ்பரிசத்தின் பரிசாக,
அமைந்துள்ள சூழலில் "வெள்ளை ஆடை சித்தர்" அவர்களின் ஜீவசமாதியில் அமர்ந்து இருப்பதே உங்களின் உள்நிலையில் பல மாற்றங்களை உருவாக்கும்.
 |
பாலக்காடு மெயின் ரோடில் அப்புபிள்ளையூருக்கு சில அடிகள் முன்னே சாலையின் வலது புறத்தில் இருக்கும் போர்டின் அருகே வலதுபுறம் செல்ல வேண்டும்
|
 |
செல்லும் வழி
|
 |
செல்லும் வழி
|
 |
செல்லும் வழி
|
 |
செல்லும் வழி
|
ஜீவசமாதியின் அருகில்
இப்பொழுது திருகோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. சுவாமிகளின் சீடர்களான திரு முரளிதரன் மற்றும் அவர் நண்பர்களுடன், தங்களது உடல் உழைப்பையும், சிலர் தங்கள் சேமிப்பை கொடுத்தும், சிலர் வெளியில் கடனுதவி பெற்றும் இத்திருபணியில் ஈடுபட்டுள்ளனர்.
இக்காலத்தில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் இருந்தாலும் இந்த இளைஞர்கள் தங்களது நேரத்தையும், உழைப்பையும், பொருளையும் இத்திருப்பணிக்காக அர்பணித்துள்ளனர். இவர்களின் செயல் போற்றுதலுக்குரியது.
இவர்கள் அனைவரும் சித்தர்களின், ஞானிகளின் அருளும் ஆசியும் பெற்று தங்களின் குருவான
வெள்ளை ஆடை சித்தரின் அருளாசியும் பெற்று இவர்களின் பணி மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.
 |
இக்கோயில் கட்டிட திருப்பணியில் பெரும்பகுதி சித்தரின் சீடர்களின் உழைப்பால் ( கூலிக்கு ஆட்களை வைக்காமல் ) உருவாகிக்கொண்டுள்ளது
|
இதை படிப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியை இத்திருப்பணிக்கு வழங்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு
Updated links