ஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் "மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்" தபோவனம் உள்ளது.
ஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் தமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, ஞானகுருவின் மனைவி பரிபூரண குணமடைந்தார்கள்.
குருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக "உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் "மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்
ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள் பற்றி அறிய http://omeswara.blogspot.in/2011/12/blog-post_3350.html
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பற்றி அறிய
![]() |
ஞானகுரு அவர்களின் உடல் ஒடுக்கமான இடம் |
![]() |
ஞானகுரு அவர்களின் உடல் ஒடுக்கமான இடம் |
![]() |
தியானம் |
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் தொடர்பாகவும், அவர் எழுதிய புத்தகங்களை இலவசமாக படிக்கவும் இங்கே click செய்யவும்.
Address:
Vadukapalayam,
Punjai Puliyampatty -638459.
Phone - 04295267318
Cell - 9791277740
Location : https://maps.google.co.in/Thabovanam
Is this a jeeva samadhi?
ReplyDelete🤲
ReplyDeleteThank you so much for the info. I was searching for this long time..
ReplyDeleteVery powerful place... You can go oly the time comes
ReplyDelete